search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேசன் சக்தி"

    இந்தியாவின் பொக்ரான் அணு குண்டு சோதனையை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. #NationalTechnologyDay #OperationShakti #Pokhran2 #Vajpayee
    புதுடெல்லி:

    இந்தியா தற்போது உலக அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பொக்ரான் அணு குண்டு சோதனை. 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பொக்ரான் சோதனை நிலையத்தில் 3 அணு குண்டுகள் சோதனை செய்யப்பட்டன. இதையடுத்து, 13-ம் தேதி 2 அணு குண்டுகள் சோதனை செய்யப்பட்டது.

    இது அணு ஆயுதத்தில் இந்தியாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஆபரேசன் சக்தி என்ற பெயரில் நடைபெற்ற அணு ஆயுத சோதனைக்கு பிறகு அப்போது பிரதமராக இருந்த  இந்தியாவை வாஜ்பாய் அணு ஆயுத நாடாக அறிவித்தார்.



    இதே நாளில் திருசூல் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த வெற்றிகளை கொண்டாடும் வகையில் மே 11-ம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.  1999-ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப  வளர்ச்சி வாரியம் புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்கும் வகையில் இந்த நாளை கொண்டாடி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இந்நாள் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய நாள். பொக்ரான் சோதனை நடந்து 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இது உலகில் இந்தியாவிற்கு என தனி இடத்தை பெற்று தந்துள்ளது என மோடி தெரிவித்தார். #NationalTechnologyDay #OperationShakti #Pokhran2 #Vajpayee

    ×